லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தரமான 5 படங்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் தான் கூலி.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின், சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் வழக்கம் போல் தரமாக அமைந்துள்ளது.
ஆகஸ்ட் 14, ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்துவிட்டது, படத்தை பார்த்த ரசிகர்களும் விமர்சனங்களை அள்ளி வீசி வருகிறார்கள்.
இந்தநிலையில் எமது ஊடகம் ரசிகர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தது.