யாழ் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர் சட்டரீதியாக சிறுவன் தான்!

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பதை சிறுவனின் வீட்டார் உறுதி செய்துள்ளனர்.

பொலிஸாரின் கட்டளையை மீறி செலுத்தி சென்ற வாகனத்தின் மீது நேற்று முன் தினம் (10.02.2026) பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டிருந்தனர்

இந்த சம்பவத்தில் காயமடைந்த வட்டுக்கோட்டையை சேர்ந்த அருள்பயஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இவ்வாறான சூழலில் குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (11.02.2026) பொலிஸார் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.

அந்த அறிக்கையில் உயிரிழந்தவர் 19 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விடயம் சர்ச்சைக்கு உள்ளானது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் உயிரிழந்தவரின் வீட்டில் கேட்டறிந்த போது, உயிரிழந்த சிறுவன் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதி பிறந்தவர் எனவும், அதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 9ஆம் திகதிக்கு பின்னரே அவருக்கு 18 வயதாக உள்ளதாகவும், தற்போது சிறுவனுக்கு 17 வயதும் 3 மாதங்களுமே ஆகின்றதாகவும் கூறியுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்