யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று மீண்டும் இராணுவத்தால் தடைசெய்யப்பட்டது.
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினர் கடந்த வருடத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த கோவிலை துப்பரவு செய்து ஒன்றரை இலட்சம் ரூபா வரை அதற்காக செலவு செய்தனர்.
பின்னர் இராணுவத்தின் வாகனத்தினூடாக கோவில் நிர்வாகத்தினரை மாத்திரம் அழைத்துச் சென்று காண்பித்தனர்.
நேற்று முன்தினம் மாலை குறித்த பாதையினை விடுவித்து மக்கள் சிலர் வழிபாடுகளில் ஈடுபட்டு, வந்தனர்.
ஆனால் இன்று வழிபாடுகளை மேற்கொள்ள ஆலயத்திற்கு சென்ற மக்களை திருப்பி அனுப்பப்பட்டனர். உள்பகுதியில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருவதால் வழிபட முடியாது என திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதன்போது வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.சுகிர்தன், செயலாளர், கோவில் தலைவர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வருகைதந்து ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனர்.
இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
விடுவிக்கப்பட்ட பலாலி அம்மன் ஆலயம் மீண்டும் இராணுவத்தால் தடைசெய்யப்பட்டது #JaffnaNewsToday #jaffnatamilnewstoday #srilankatiktok #tranding #viralnews #srilankatiktok #viralvideos #jaffnanews #jaffnatamilnewstoday #jaffnanewstoday #anurakumaradissanayake #anurakumaradissanayake🔥🇱🇰 #trendingpost #jaffna
Posted by A7tv News on Saturday, June 28, 2025