🔴 VIDEO கண் திறந்த விநாயகர் சிலை: தமிழர்பகுதியில் நடந்த அதிசயம்

வவுனியா, தோணிக்கல் பகுதியிலுள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சிலையின் இரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திலுள்ள அமைத்துள்ள பிள்ளையார் சிலையின் கண்களானது மூடிய நிலையிலே காணப்பட்ட நிலையில் நேற்று (14.11) மாலை குறித்த சிலையின் கண்கள் திடீரென திறந்துள்ளது.

பக்தர் ஒருவர் வழிபடச் சென்ற போது குறித்த பிள்ளையார் சிலையில் ஒரு கண் திறந்து இருந்துள்ளது. அதன் பின் இரு கண்களும் திறந்த நிலையில்; பிள்ளையார் காட்சி கொடுத்துள்ளார். அவர் அதனை ஏனையவர்களுக்கு தெரிவித்த நிலையில் பலரும் அவ் அதிசயத்தை பார்க்க சென்றனர். சிறிது நேரம் திறந்து இருந்த கண்கள் பின்னர் வழமையான நிலைக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் சுற்றியுள்ளவர்களிற்கு அறிந்த நிலையில், குறித்த அதிசயத்தை காண பொதுமக்கள் அதிகளவில் கோவிலை சூழ்ந்து பிள்ளையாரை பார்த்துச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vehicles
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!
india
யாழை வந்தடைந்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்!
passports
வீதியோரத்தில் இருந்து மீட்க்கப்பட்ட கடவுச்சீட்டுகள்!
jaffna university
யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை - ரஜீவன் எம்.பி
maldives
மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்
jaffna sea
யாழ். தாளையடி கடற்பகுதிக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!