தெலுங்கானா மாநிலத்தில் பேக்கரி ஒன்றில் வாங்கிய கோழி பணிஸில் இறந்த நிலையில் பாம்பு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மஹபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லாவில் உள்ளூர் பேக்கரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்ரீசைலா என்ற பெண் நேற்று(12) அங்கு, தனது குழந்தைகளுக்காக ஒரு முட்டை பணிஸ் மற்றும் ஒரு கோழி பணிஸ் வாங்கி சென்றார்.
வீட்டில் கோழி பணிஸ் பார்சலை திறந்தபோது உள்ளே இறந்த சிறிய பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அதை எடுத்துக்கொண்டு நேராக பேக்கரிக்குச் சென்று கேட்டுள்ளார். ஆனால் பேக்கரி உரிமையாளர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது.
కర్రీ పఫ్లో పాము
— Telugu Scribe (@TeluguScribe) August 12, 2025
జడ్చర్ల మున్సిపాలిటీ పరిధిలోని అయ్యంగార్ బేకరీలో ఒక ఎగ్ పఫ్, ఒక కర్రీ పఫ్ కొనుగోలు చేసిన శ్రీశైల అనే మహిళ
అయితే ఇంటికి వెళ్లి పిల్లలతో కలిసి తినేందుకు ఆ కర్రీ పఫ్ను చింపి చూడగా అందులో పామును చూసి షాక్ అయిన శ్రీశైల
వెంటనే ఆ పఫ్ను తీసుకుని బేకరీ యజమానిని… pic.twitter.com/1SvlXzJHnh
உரிமையாளரின் நடத்தையால் கடும் கோபமடைந்த ஸ்ரீசைலா பொலிஸ்நிலையத்தில் புகார் அளித்தார். பொலிசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.