ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையை சேர்ந்த செவிலியருக்கு ஏற்பட்ட நிலை!

ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோசமான நிலைமையின் போது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை அண்டிய Beersheba மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இலங்கை செவிலியர் இரோஷிகா சதுரங்கனி என்பவரே ஈரான் நடத்திய தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா, தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த இரோஷிகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைத் தூதரகத்தினால் அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!