பாரிய தாக்குதலை மேற்கொள்ள இருந்த இளைஞர்கள்: பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் மூவர் மீது சந்தேகம் நிலவுவதாகவும் சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

T-56 துப்பாக்கியுடன் பயணித்த ஒருவர் கிரிபத்கொடை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வவுனியா பிரிவு குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி கைக்குண்டுகளுடன் மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்தனர்.

இந்நிலையில் , பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய வவுனியா பகுதிக்குச் சென்றிருந்த போது, மூவரும் வவுனியா பகுதியில் இருந்து தப்பியோடியுள்ளதால், அவர்களை கைது செய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும், குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மக்கள், சந்தேக நபர்களைக் குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொறுப்பதிகாரி விசாரணை பிரிவு – 071-8596150 அல்லதுபொறுப்பதிகாரி – பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு – 071-8591966 என்ற தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!