அநுர அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்திற்கு அமைய, மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.

புதிய அமைச்சரவை மாற்றத்தின்படி, இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சரின் விடயதானங்கள் அதற்கேற்ப மாற்றப்பட்டுள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய பிமல் ரத்நாயக்கவிடமிருந்து சிவில் விமானப் போக்குவரத்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக நகர அபிவிருத்தி அமைச்சு இணைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிமல் ரத்நாயக்க இன்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றார்.

பிமல் ரத்நாயக்கவிடமிருந்து நீக்கப்பட்ட சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அனுர கருணாதிலகவிடம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பணியாற்றிய அவர், இன்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பதவியேற்றார்.

அத்துடன் அனுர கருணாதிலகவிடமிருந்து நீக்கப்பட்ட நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சுப் பொறுப்பு பிரதி அமைச்சராகப் கடமையாற்றிய வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது .

அதன்படி, காணி மற்றும் நீர்ப்பாசனத் துறை பிரதி அமைச்சராக இருந்த சுசில் ரணசிங்க, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.

முன்னர் எந்த அமைச்சுப் பதவியையும் வகிக்காத கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, தினிந்து சமன் குமார, நிஷாந்த ஜயவீர மற்றும் எம்.எம்.ஐ. அர்கம் ஆகியோர் பிரதி அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

அதன்படி, இன்று பதவியேற்ற புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பின்வருமாறு

அமைச்சரவை அமைச்சர்கள்

01.பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்

02.அனுர கருணாதிலக – துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்

03.வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்க – வீடமைப்பு , நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

01.கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ – நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

02.டி.பி. சரத் – வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்

03.எம்.எம். மொஹமட் முனீர் – சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்

04.எரங்க குணசேகர – நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

05.வைத்தியர் முதித ஹங்சக விஜயமுனி – சுகாதார பிரதி அமைச்சர்

06.அரவிந்த செனரத் விதாரண – காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

07.எச்.எம். தினிது சமன் குமார – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

08.யு.டி. நிஷாந்த ஜயவீர – பொருளாதார அபிவிருத்தி பிரதிய அமைச்சர்

09.கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன – வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்

10.எம். எம். ஐ. அர்கம் – வலுசக்தி பிரதி அமைச்சர்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!