போர் வீரர் நினைவுத்தூபி விவகாரம்: காவல்துறையில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு உத்தரவு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாளை(22) தலங்கம காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லவில் உள்ள சிறிலங்கா ராணுவத்தின் போர்வீர்ரகளின் நினைவிடத்தில் காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே மேற்படி வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

இந்த உத்தரவின்படி, குற்றம் சாட்டப்பட்ட விமல் வீரவன்ச நாளை காவல்நிலையத்தில் முன்னிலையாகத் தவறினால், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 172ஆம் பிரிவின் கீழ் அவருக்குத் தண்டனை வழங்குவதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், அத்துமீறி நுழைதல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், தலாங்கம காவல்துறையினர் இச்சம்பவம் குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்றை நேற்று முன்தினம் (20) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்