வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரன குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் வவுனியா மாவட்டங்களே அதிக அபாயமிகுந்த வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சமன் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண ரீதியில் பூச்சியியல் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதன்படி, மாகாணத்தில் பல இடங்களில் டெங்கு நுளம்புக்கான குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மழையுடனான வானிலையால் நுளம்புக் குடம்பிகள் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் டெங்கு காய்ச்சல் பரவ ஆரம்பித்தால் அதன் தாக்கம் சடுதியாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களே அதிக அபாயமிகுந்த வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வாரத்திற்கு ஒருமுறையேனும் தமது சுற்றுச் சூழலைத் துப்பரவாக்கி, சிறந்த சுகாதார முறையைப் பேணுமாறு, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன கோரிக்கை விடுத்துள்ளார்.