🔴 VIDEO பெண் ஊடகவியலாளர் மீது துப்பாக்கி சூடு.. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டத்தில் நடப்பது என்ன?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிரான போராட்டத்தின் போது செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த பெண் ஊடகவியலாளர் மீது, அமெரிக்க காவல்படை வீரர் ஒருவர் ரப்பர் தோட்டாவால் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை நாடு கடத்தும் முயற்சியில் அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரமாக இறங்கியுள்ளார். குடிபெயர்ந்தவர்களை கண்டறிந்து கைது செய்ய லாஸ் ஏஞ்சல்ஸில் சுமார் 2000 பேர் அடங்கிய தேசிய காவல்படையை முடுக்கிவிட்டுள்ளார். இவர்கள் நகரின் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸின் பாரமவுண்ட் பகுதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் தென்னமரிக்காவைச் சேர்ந்த பூர்வீக ஹிஸ்பானிக்கள் என்பதால் அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றனர்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புலப்பெயர்ந்தோர்களை தேசிய காவல்படை கைது செய்துள்ளது.

ட்ரம்பின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு கலிபோர்னியா கவர்னர் கெவின் நியூசம், லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் கரேன் பாஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல்படையினரின் நடவடிக்கையால் நகரில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸில் பொதுமக்கள் பலரும் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!