குடும்ப தகராறில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மனைவி – கணவர் கைது!

குளியாப்பிட்டிய – வல்பிடகம பகுதியில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, கணவர் தனது மனைவியை மண்வெட்டியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார் என்று குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வடுமுன்னேகெதர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலம் தற்போது குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 43 வயதுடைய அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம், நாட்டின் பல பகுதிகளில் நிலவும் குடும்ப வன்முறைகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!