ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் ஆள் மாறாட்டம் செய்து சட்டவிரோதமாக கைதிகள் விடுதலை!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டு, கடந்த வெசாக் தினத்தன்று சில கைதிகள் விடுவிக்கப்பட்டிருப்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, வேறு கைதிகளை விடுவித்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், அனுமதிக்கப்பட்ட கைதிகளுக்கு மேலதிகமாக, சில கைதிகளை சிறைச்சாலை நிர்வாகம் சட்டவிரோதமாக மன்னிப்பு வழங்கி விடுவித்ததாகக் கருதப்படும் சந்தேகநபர்கள் தொடர்பாக, கடந்த 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலத்தால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் அது குறித்து விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆவணங்களைப் பரிசீலித்து அவரிடமிருந்து வாக்குமூம் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, இந்த பொது மன்னிப்பு சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டு, கடந்த வெசாக் தினத்தன்று சில கைதிகள் விடுவிக்கப்பட்டிருப்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்து கொண்டிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த விசாரணையில், இதற்கு முன்னரும் இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவிருந்த கைதிகளில் அனுமதி பெறப்படாத கைதிகளும் விடுவிக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இது தொடர்பாக எதிர்காலத்தில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர்களை சிறைச்சாலைகளில் இருந்து சட்டவிரோதமாக விடுவிப்பது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மன்னிப்பு எனும் போர்வையில் முறைகேடு – 10 மணித்தியாலங்களுக்கு மேலாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் CID விசாரணை

ஜனாதிபதி மன்னிப்பு எனும் போர்வையில் கைதிகளை அனுமதியின்றி விடுவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டுள்ளது.

துஷார உபுல்தெனியவின் இரண்டாவது சுற்று விசாரணை இதுவாகும். நேற்று முன்தினம் அவர் 05 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சில கைதிகளை சட்டவிரோதமாக விடுவிப்பதற்காக ஜனாதிபதி மன்னிப்பு, தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஜனாதிபதி செயலகம் அளித்த முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

கைதி ஒருவரை அனுமதியின்றி விடுவித்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (8) கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (9) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்பபடுத்தப்படவுள்ளார்.

2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், அந்த நபருக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி செயலகம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முறையான அங்கீகாரம் இன்றி கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கக்கூடிய கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

177d533f-562e-4df3-b574-d98d574432e5
வவுனியாவில் கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு!
New Project t (3)
உலகில் உயர்ந்த வாகன விலையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை!
New Project t
கனடாவில் பொலிசாரால் தேடப்படும் தமிழ் இளைஞன்!
mullaithevu-boy-issue
முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்...! பொலிஸ் ஊடக பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கை
New Project t (4)
முல்லைதீவில் இளைஞன் தாக்கப்பட்டு மரணமடைந்தமை தொடர்பில் NPP யின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிவிப்பு!
mullaithevu
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை. 5 இராணுவத்தினர் கைது