யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணத்தில் சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உதயபுரம் பகுதியில் சகோதரர்கள் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர்.

இந்நிலையில் அது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான நபர்களால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நாயன்மார் கட்டு பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , வாள் வெட்டு தாக்குதலுக்கு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டா சைக்கிள் மற்றும் மூன்று கூரிய வாள்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!