குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வர்த்தகரின் உடல்: நடந்தது என்ன?

மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக அவரது நண்பர் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரவில, கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஸ்ரீஜித் ஜயஷன் என்ற இந்த வர்த்தகர், கடந்த 30ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று (03) மாலை வென்னப்புவ பகுதியில் உள்ள வர்த்தகரின் நண்பரின் வீட்டில் அவரது மோட்டார் வாகனம் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர், அந்த நண்பரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வென்னப்புவ சிரிகம்பொல பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பைத் தொட்டியில் காணாமல் போன வர்த்தகரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த 30ஆம் திகதி இரவு, வர்த்தகர் தனது ஐந்து நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, வர்த்தகர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்யும் பொருட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (3)
வெளிநாட்டவர் ஒருவரை நடனமாடி வரவேற்ற ஊழியர்கள்: வைரலான வீடியோவால் வலுக்கும் கண்டனம்
New Project t (1)
நாடாளுமன்றில் கடும் குழப்பம்: சபாநாயகரை "வாயை மூடுங்கள்" என கூறிய எதிர் கட்சியின் பெண் எம்.பி!
New Project t
மூளாய் பகுதியில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு! மேலும் மூவர் அதிரடிக் கைது!
Jaffna TID
யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்
kundu0
86 கைக்குண்டுகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது
New Project t (4)
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமாக? - போராட்டத்தில் குதித்த மக்கள்!