இங்கிலாந்தின் லண்டன் சவுத்தெண்ட் விமான நிலையத்தில் நேற்று மாலை பிசினஸ் ஜெட் விமானம் புறப்பட்டு மேலே பறப்பதற்குள் விபத்துக்குள்ளானது. இந்தக் விமான விபத்து, மேகங்களை மூடிய அளவிற்கு கரும்புகை ஏற்பட்டு, சுற்றியுள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
B200 சூப்பர் கிங் எயர் எனும் சிறிய ஜெட், நெதர்லாந்தின் லெலிஸ்டாட் நோக்கி புறப்பட திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல். ஆனால் புறப்படும் நிலையில் திடீரென வெடித்து எரிந்தது, அதன் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
BREAKING: Plane Crash at London Southend Airport.
— Crypto Aman (@cryptoamanclub) July 13, 2025
A Beechcraft Super King Air light aircraft crashed shortly after takeoff from London 🇬🇧 Southend Airport, erupting into a massive fireball.
Police confirm a “serious incident” and are coordinating with emergency services.… pic.twitter.com/Q7pxEEXFGp
பிரிட்டிஸ் பொலிஸார் கூறுவதாவது, “சுமார் 12 மீட்டர் நீளமுள்ள இந்த சிறிய விமானம் இன்று விபத்துக்குள்ளானது. மீட்பு பணிகளும், விசாரணை நடவடிக்கைகளும் தொடருகின்றன.” என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உள்ளூர் எம்பி டேவிட் பர்டன்-சாம்ப்சன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
விமானத்தில் இருந்த பயணிகள் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் குறித்து உறுதி செய்யப்படவில்லை. நான்கு ஆம்புலன்ஸ்கள், ஒரு ஏரியா ரெஸ்பான்ஸ் யூனிட், மூன்று மூத்த பராமரிப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் ஆகியவை உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.
BREAKING: Business jet crashes at London Southend Airport, no word on casualties https://t.co/bWgUMnFAhr
— BNO News (@BNONews) July 13, 2025
விபத்து இடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இடம்பெயர்த்தனர். மேலும் விமான பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.