கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு தொடர்பான நீதிமன்றின் அறிவித்தல்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட நிதி மோசடி தொடர்பான வழக்கை நிறைவு செய்வதற்காக கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று (9) அறிவித்துள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கை தொடர்ந்துள்ளதால், கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நிறைவுக்கு கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இதன்போது நீதவான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடியும் என தெரிவித்தனர்.

அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் தொடரப்பட்ட குறித்த வழக்கின் நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடிவு செய்த பிரதான நீதவான், பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்