தென்னிலங்கையில் இரவு ஏற்பட்ட பதற்ற நிலை!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்தில் நேற்று இரவு பயணிகளின் செயற்பாட்டால் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலி நோக்கி செல்லும் இரவுநேர தபால் தொடருந்து பழுதடைந்ததால், கடலோரப் பாதையில் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டிக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் தொடருந்து பழுதடைந்துள்ளது. இதனால், மேலும் இரண்டு தொடருந்துகள் அந்தப் பாதையால் பயணிப்பதில் தாமதமாகின.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் பயணிகள் ஆக்ரோஷமாக செயற்பட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

பயணிகளின் கடும் கோபத்தினால் அச்சமடைந்த என்ஜின் ஓட்டுநரும் உதவியாளரும் என்ஜின் அறைக்குள் நுழைந்து தங்களை தாங்களே பூட்டிக் கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SocialMediaControversy
'சிவுருக்கு நீதி' நடைபயணப் பின்னணி: பிக்கு அல்ல, முன்னாள் நகர சபை உறுப்பினர் என சமூக ஊடகங்களில் தகவல்
JaffnaNews
அராலி சந்தியில் முச்சக்கர வண்டியுடன் மோதிய பேருந்து: போதைப்பொருள் பாவித்த சாரதியை கைது செய்தது பொலிஸ்
Mullaithivu
முல்லைத்தீவு மீனவர்கள் 3 பேரைக் கண்டுபிடிக்க சர்வதேச தேடுதல்: வெளிவிவகார அமைச்சுக்கு அவசர கடிதம்
Thileepan
நல்லூர் திலீபன் நினைவாலயம் சட்டவிரோதமானது: உடனடியாக இடித்து அகற்றுமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தல்
NirmalanWigneswaran
சீ.வி. விக்னேஸ்வரனின் புதல்வர் நிர்மலகுகன் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பதவி உயர்வு!
TINNumber
நவம்பர் 1 முதல் நிதி, சட்ட நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!