உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரியை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவின் உச்சநீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அமல்படுத்திய உலகளாவிய இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என கூறி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கடந்த ஆண்டு டிரம்ப் வரி விதித்தார்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பதிலாக, 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி டிரம்ப் நிர்வாகம் இந்த வரிகளை விதித்தது.

ஆகஸ்ட் 2025 இல், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் டிரம்பின் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்தது, ஆனால் அவை அமலில் இருக்க அனுமதிக்கப்பட்டன.

அந்த மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வெள்ளை மாளிகை கோரிக்கை வைத்ததால், விவகாரம் இறுதியில் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

நீதிபதிகள் கூறியது என்ன?
அமெரிக்க உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், டிரம்ப் தனது அதிகாரங்களை மீறி தேசிய அவசரநிலைக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்தியதாகக் கூறியது.

சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் வரிகளை விதிக்க அனுமதிக்கவில்லை என நீதிபதிகள் கூறினர்.

(இச்செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) BBC

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!