யாழ்ப்பாணப் பல்கலையின் கறுப்புக் கொடி விவகாரம்: மாணவர்களிடம் 5 மணி நேர விசாரணை!

சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு சுமார் 5 மணி நேரம் விசாரணை நடாத்தி வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களை விசாரணைக்கு வருமாறு பல்கலைக்கழக பதிவாளர் ஊடாக கடந்த 13ஆம் திகதி திகதியிடப்பட்டு , 16ஆம் திகதி காலை 09.30 மணிக்கு விசாரணைக்கு சமூகமளிக்க வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கடிதம் 17ஆம் திகதியே பதிவாளரால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து மாணவர்களுக்கு ஏதுவான நேரத்தை அறிவித்து , அந்நேரத்தில் விசாரணைக்கு வருமாறு பதிவாளருக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு மாணவர்கள் வாக்குமூலம் அளிப்பதற்காக யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையம் சென்று இருந்த நிலையில் , மாணவர்களிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி யாழ் . பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பதிவு செய்த பொலிஸார் இன்றைய தினம் மூன்று மாணவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

பெறப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில், அவை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை மூன்று மாணவர்களை விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சக மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்றலில் இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் நடாத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்