அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலைமையைப் பேணி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் விளக்குகையில்:

“ஈரானுக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்தன. அதேவேளை, அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை (Fighter Jets) மத்தள விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு அனுமதி கோரியிருந்தது.அமெரிக்க விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்தது

சர்வதேச விவகாரங்களில் எவ்வித பக்கச்சார்புமின்றி நடுநிலைமையைப் பேணுவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளினதும் இந்தக் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதன் மூலம் நாம் எமது நடுநிலைத் தன்மையைப் பாதுகாத்துள்ளோம்,” என அவர் குறிப்பிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்