ஈரானில் 25 ஆவது நாளை எட்டிய நாடு தழுவிய இணைய முடக்கம்!

ஈரானிய அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய இணைய சேவை முடக்கம் இன்றுடன் (மார்ச் 24) 25 ஆவது நாளை எட்டியுள்ளதாக சர்வதேச இணைய கண்காணிப்பு அமைப்பான ‘NetBlocks’ தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான இந்த இணைய முடக்கம் தற்போது 576 மணித்தியாலங்களைத் தாண்டியுள்ளது.

இந்தத் திட்டமிட்ட முடக்கத்தினால் ஈரான் நாட்டு மக்கள் வெளிவுலகில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள் அல்லது அவசர அறிவிப்புகளைப் பெறுவதற்குக் கூட வழியின்றி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

வைட் லிஸ்ட்’ எனப்படும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில கணக்குகள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.

இதன் மூலம் செய்திகளைத் தமக்குச் சாதகமாக மாற்றியமைக்க ஈரான் அரசு முயற்சிப்பதாக ‘NetBlocks’ அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்போதைய போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டே இணையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்களின் குரல் சர்வதேச மட்டத்தை எட்டவிடாமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!