இலங்கைக்கு எரிபொருளை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை (Refined Fuel) வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தலைமையிலான தூதுக்குழுவினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய எரிபொருள் தேவையை கருத்திற்கொண்டு, தட்டுப்பாடின்றி சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை வழங்குவதற்கு ரஷ்ய பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இடைத்தரகர்கள் இன்றி அரச மட்டத்திலான நேரடி உடன்படிக்கைகளின் ஊடாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

எரிபொருள் விநியோகம் மாத்திரமன்றி, இலங்கையின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் ரஷ்யா தனது ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்