இந்தியாவிலிருந்து 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளைக் கொண்ட கப்பல் ஒன்று நாளை (28) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் வரும் இந்தச் சரக்குக் கப்பலில்
20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் என்பன உள்ளடங்கியுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
