சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி!

சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததோடு பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர்  படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் யாழ். தென்மராட்சி கெற்பேலி, வீரபத்திரர் கோவிலடியில் இன்று(28) காலை 8:25 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து கொடிகாமம் பொலிசார் இருவர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். இதன் போது மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை வழி மறித்துள்ளனர்.

உழவு இயந்திரம் நிறுத்தாது பொலிஸ் உத்தியோகத்தர்களை மோதி தள்ளியதோடு நிறுத்தாமல் சென்றுள்ளது.

இதனால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் காயம் அடைந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து கிளாலியில் வைத்து உழவு இயந்திரத்தை கைப்பற்றியதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில்  ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயதுடைய ஹெட்டியாராட்சிக்கே அல்பேட் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!