ராஜங்கனை சத்தாரதன தேரர் கைது!

ராஜங்கனே சத்தாரதன என்ற தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக வலைதளங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தேரரை சங்க அமைப்பிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா ராமண்ய மகா நிகாயவின் செயற்குழு கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்திருந்தது.

அவர் யூடியூப் செனல் ஒன்றை நடத்தி வருவதோடு, சமூக வலைதளங்கள் வாயிலாக அவர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MagazinePrison
மகசீன் சிறைச்சாலை N பிரிவில் ஞானசார தேரர்; நாமல் ராஜபக்சவுடன் ஒரே இடத்தில் தடுத்து வைப்பு!
protes
Thileepan Statue Protest: திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து லண்டனில் போராட்டம்
ProtestArrest
வரி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான பேரணி: புறக்கோட்டையில் 6 பேர் கைதாகினர்!
PoliceOfficerArrested
வாகன விபத்து வழக்கில் லஞ்சம்: பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்
ChennaiHighCourt
சுற்றுலா விசாவில் வந்து திருமணம்: நாடுகடத்தப்பட இருந்த இலங்கை பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு!
IranOilTanks
ஈரான் கப்பல்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை!