19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!

புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 19 நாட்களேயான கைக்குழந்தை ஒன்றை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை ஆனமடுவ – அடிகம பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குழந்தையை வாங்குவதற்காக அழைத்து வரப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வான் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் குழந்தையின் தாய், அவரது மூத்த சகோதரர், அவரது மனைவி, குழந்தையை வாங்கத் தயாராக இருந்த தம்பதியினர் மற்றும் வானின் சாரதி ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தையை விற்க முயன்ற தாயும் அவரது சகோதரரும் அனாமடுவ – அடிகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், குழந்தையை வாங்கவிருந்த தம்பதியினர் கல்பிட்டி – மாம்புரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட வானை ஓட்டி வந்த நபர் புத்தளம் – பாலாவிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த குழந்தை விற்பனையில் தரகராக ஒரு மருத்துவர் செயல்பட்டுள்ளமையும் மேலதிக விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், மீட்கப்பட்ட குழந்தை மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வான் ஆகியன மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்