சீ.வி. விக்னேஸ்வரனின் புதல்வர் நிர்மலகுகன் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பதவி உயர்வு!

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான சீ.வி. விக்னேஸ்வரனின் புதல்வரான நிர்மலகுகன் விக்னேஸ்வரன் மேலதிக சொலிஸிஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்மலகுகன் விக்னேஸ்வரன் எதிர்வரும் 2 ஆம்திகதி ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.

இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடந்த சில வருடங்களாக பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றியிருந்தார்.

இவர் இலங்கை சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், கட்டுமானச் சட்டங்களின் நடுவர் மன்றங்கள் உட்பட பல சர்வதேச நடுவர் மன்றங்களில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு காலத்தில், இவர் ஓமான் சுல்தானகத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தில் (2011-14) சட்ட வல்லுநராகப் பணியாற்றினார், அங்கு இவர் பல கட்டுமானத் திட்டங்களில் ஈடுபட்டிருந்தார்.

நிர்மலகுகன் விக்னேஸ்வரன் அமெரிக்காவிலுள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் இராஜதந்திரத்தில் முதுகலை பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.

மேலும் இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் இணையச் சட்டம் மற்றும் கட்டுமானச் சட்டம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும் உள்ளார். இவர் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவருமாவார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalStatement
மக்கள் துயர்தீர 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார்: 50ஆவது நாளில் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கை!
BritishAirways
10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கான சேவையை மீண்டும் தொடங்கியது பிரிட்டிஷ் ஏர்வேஸ்!
SriLankaWeather
வங்காள விரிகுடாவில் உருவாகிறது புதிய சூறாவளி: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
SritharanMP
செம்மணி புதைகுழி அகழ்வு மற்றும் காணி விடுவிப்பு: கனடா வெளிவிவகாரத் திணைக்களத்திடம் சான்றுகளுடன் சிறீதரன் எம்.பி. கோரிக்கை
ChemmaniMassGrave
செம்மணி புதைகுழி அறிக்கை: 'பெரும் மனிதப் புதைகுழி' சொற்றொடர் நீக்கம் - நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
ViharamahadeviPark
நீதிமன்ற உத்தரவையும் மீறித் தொடரும் சத்தியாகிரகம்: கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பிக்குகள் ஆஜர்!