கடவத்தை, மஹகடே சந்தியில் இன்று சனிக்கிழமை (31) பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்துப்பாக்கிச் சூட்டின் போது அச்சிறுவனின் முதுகெலும்புப் பகுதியில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
.காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
