இலங்கையில் தங்கம் விலை திடீர் உயர்வு : ஒரே நாளில் இருமுறை மாற்றம்

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் இன்று (05) தங்கத்தின் விலையில் இரு தடவைகள் அதிரடி மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் நிலவரப்படி, ஒரு பவுண் தங்கம் 5,000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.

அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 390,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் படி, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதன் நேரடித் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்துள்ளது.

குறிப்பாக, இன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை திருத்தப்பட்டமை வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் நாட்களிலும் உலகளாவிய பொருளாதார சூழலுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மேலதிக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நகையக உரிமையாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!