ராவணா எல்ல அருகே கொடூர விபத்து: பள்ளத்தில் பாய்ந்தது கார் – பெண்ணும் ஆணும் படுகாயம்!

எல்ல – வெல்லவாய பிரதான வீதியின், ராவணா எல்ல பகுதிக்கு கீழே கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது பெண்ணே காரைச் செலுத்தியுள்ளார் என்றும், விபத்துக்குள்ளானவர்கள் திஸ்ஸமஹாராமய பகுதியைச் சேர்ந்த இருவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!