வவுனியாவில் அதிர்ச்சி: இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு 3 மணி நேரத்தின் பின் தாக்கப்பட்டு விடுவிப்பு!

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்று (07.05) பிற்பகல் 3 மணியளவில் பேரூந்து ஒன்றில் ஏறி தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடம் இருந்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைத் தொலைபேசியை பறித்துக் கொண்டு பேரூந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

இதன்போது அங்கு நின்ற முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சிலர் குறித்த இளம் குடும்பஸ்தரை முச்சக்கர வண்டியில் ஏறுமாறு கூறி ஏற்றிக் கொண்டு வவுனியா, புதிய பேரூந்து நிலையத்திற்கும், சோயா வீதிக்கும் இடையிலுள்ள வயல் வெளி பகுதிக்கு அழைத்து சென்று தன்னை தாக்கியதுடன், அவர்களால எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் கையொப்பமும் பெற்றதாகவும், தொலைபேசியில் இருந்த சில ஆவணங்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின் மாலை 6.30 இற்கு பின்னர் தன்னை விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்