உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்ந்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகிவருகின்றது.

அந்த வகையில், இன்று (30) இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் பதிவாகியுள்ளது.
அதன்படி, இன்றையதினம் (30.12.2025) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.
அந்தவகையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
