லிட்ரோ எரிவாயுத் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்தி வெளியானதை தொடர்ந்து பொது மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.

அதன்படி எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை இருக்காது என்றும் போதுமான அளவு இருப்பு உள்ளது என்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு அறிக்கையை வெளியிட்டு, நிறுவனத்திடம் போதுமான அளவு இருப்பு இருப்பதாக லிட்ரோ நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது.

தேவையற்ற பீதி வேண்டாம் என்று நிறுவனம் பொது மக்களிடம் கோரியுள்ளது.

பெப்ரவரி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் ஏற்கனவே 284,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இன்று (19) முதல் சனிக்கிழமை வரை மேலும் 351,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்