அம்பாறையில் புலிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் மீட்பு!

அம்பாறையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பாவித்தத்தாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சாகாமம் விசேட அதிரடிப்படையினர் இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவல் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டியா காட்டுப்பகுதியில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் நேற்று (29-06-2026) மாலை குறித்த பகுதியில் உள்ள மரப்பொந்து ஒன்றில் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வழமை போன்று ரோந்து சென்ற விசேட அதிரடிப்படைக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஸ்னைப்பர் துப்பாக்கி -01 ஒரு தொலைநோக்கி -01 ரவைக்கூடு -01 மற்றும் தோட்டாக்கள் -07 உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளடங்குவதுடன் தற்போது தமன காவல் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக இவற்றை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட பகுதியில் கடந்த யுத்த காலங்களில் விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களாக அறிவித்து செயற்பட்டு வந்ததுடன் கெரில்லா போர் உத்தியை இவ்வாறான ஆயுதங்கள் ஊடாக வெளிப்படுத்தி வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்