🔴 VIDEO பாடசாலை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை: போராட்டத்தில் குதித்த பாடசாலை மாணவன்!

வவுனியா, பூந்தோட்டம் மகாவித்தியாலய மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லவில்லை என தெரிவித்து வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

⬇️காணொளியை இங்கே பார்க்கலாம்⬇️

பாடசாலை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை!போராட்டத்தில் குதித்த பாடசாலை மாணவன்! #a7tvnews #a7tv #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday

Posted by A7tv News on Friday, July 4, 2025

குறித்த பாடசாலையால் இன்றையதினம் (04) திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச் சுற்றலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களிடம் இருந்து பணம் அறவிடப்பட்டுள்ளது.

குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார். இருப்பினும் காலை சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச் செல்ல முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கவலையடைந்த மாணவன் தனது பெற்றோருடன் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகம் முன்பாக சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தான். இதனையடுத்து வலயக்கல்வி அதிகாரிகள் பாடசாலை நிர்வாகத்திற்கு அழைப்பை ஏற்ப்படுத்தி மாணவனை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான ஏற்ப்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியிருந்தனர். இதனையடுத்து மாணவன் தனது போராட்டத்தை கைவிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!