ரணில் வீட்டில் இருந்துகொண்டா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கை வெளியிட்டார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை தவறு என்ற தொனிப்பட சுமந்திரன் கருத்து சொல்லி இருப்பதாக அறிகிறோம்.

சுமந்திரன் இதனை ரணிலின் வீட்டில் இருந்தா கூறினார்? என சந்தேகிக்கிறோம்.
கடந்த காலங்களில் பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை, படுகொலைகள் செய்யப்பட்டமை, தமிழர்களின் நூலகம் எரிக்கப்பட்டமை, தமிழர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு காரணமான ஒருவரை கைது செய்திருப்பது தவறு என சுமந்திரன் கூறுகிறார்.

அவர் ரணிலுடன் நெருக்கமானவர், சிலவேளைகளில் ரணிலின் வீட்டில் இருந்து கூட அந்த கருத்தை சொல்லி இருக்கலாம்.
ஆனால் எமது ஆட்சியில் சட்டம் அனைவருக்கும் சமம். குற்றம் செய்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.