மாட்ரிடில் நடைபெற்ற சர்வதேச அளவிலான “Best CEO Awards 2026” விருது வழங்கும் விழாவில், உலகின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளுள் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளார் யாழ்ப்பானம் புங்குடுதீவை சேர்ந்த ஶ்ரீ இராசமாணிக்கம்.

இந்த உயரிய விருதிற்காக 70-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 1,089 பேர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், பல்வேறு துறைகளில் இருந்து வெறும் 70 தலைவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
தொழில்துறை முன்னேற்றம், புதுமை, மாற்றுத் தலைமையியல் மற்றும் உலகளாவிய தாக்கம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
“Best Awards International USA” அமைப்பு வழங்கிய இந்த விருது, உலக வணிக மற்றும் தொழில்முனைவு துறைகளில் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மேலும் Forbes, CEO Times, Business Insider மற்றும் UAE Time Magazine உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற ஊடகங்கள் மற்றும் வணிக தளங்களும் இந்த சாதனையை பாராட்டியுள்ளன.
இந்த விருது குறித்து ஶ்ரீ இராசமாணிக்கம் தெரிவித்ததாவது: “இது எனது தனிப்பட்ட வெற்றியல்ல; என்னை நம்பி ஆதரித்த அனைவரின் வெற்றியும் ஆகும்.
அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தெளிவான பார்வை இருந்தால் உலகளவில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதற்கான சான்றிதழ் இது” என்றார்.
இந்த சாதனைக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
