நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால் , ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆலய சூழலில் திருடர்களின் நடமாட்டம் காணப்படுவதால், ஆலயத்திற்கு தங்க நகைகளை அணிந்து வருவதை தவிர்க்குமாறும் , அணிந்துள்ள தங்க நகைகளில் கவனம் செலுத்துமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

அத்துடன் , பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸார் ஆலய சூழல்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும், அருகில் உள்ளவர்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்தால் , பொலிஸாருக்கு உடன் அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை ஆலய சூழல்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு , அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!