தெல்லிப்பழை மருத்துவமனையில் தவறுதலான சத்திர சிகிச்சை: பெண் பாதிப்பு; பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுப்பு!

நெஞ்சுப் பகுதியிலிருந்த கொழுப்புக் கட்டி சத்திரசிகச்சை செய்வதற்காக தெல்லிப்பழை மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணுக்கு தவறுதலாக அக் குள் பகுதியில் சத்திர சிகிச்சை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதி யைச் சேர்ந்த அந்தப் பெண் நெஞ்சுப் பகுதியில் இருந்த கொழுப்புக் கட்டிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் சத்திரசிகிச்சை செய்வதற்காக தெல்லிப்பழை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இவ்வாறு சென்ற இடத்திலேயே அவருக்கு அக்குள் பகுதியில் சத்திரசி கிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பெண்ணுக்குத் தவறுதலாக அறுவைச் சிகிச்சை செய் யப்பட்டுள்ளது என்பதை அவதானித்த மருத்துவ நிபுணர்கள் அது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த விடயம் மருத்துவமனையில் பெரும் சர்ச்சை யாக உருவெடுத்த நிலையில் பாதிக்கப் பட்ட தரப்பினர் தமக்கு நீதிகோரி தெல் லிப்பழை பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கச் சென்றவிடத்து, அந்த முறைப்பாட்டை ஏற்பதற்கு பொலிஸார் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் நீதி யைப் பெறுவதற்கு அவர்கள் நடவ டிக்கை எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த மருத்துவ நிபுணர் இதற்கு முன் னரும் இவ்வாறாகத் தவறான முறை யில் சத்திர சிகிச்சைகளை செய்திருந்தார் என்பதும், அது பெரியளவில் சர்ச்சையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்