ஹிக்கடுவ கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள ஈரானிய கப்பலின் பாகங்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

காலி கடற்கரையில் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஈரானிய கப்பலின் பல துண்டுகள் இன்று (07) ஹிக்கடுவ முதல் சீனிகம வரையிலான கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன.

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற போர் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய ‘ஐரிஸ் டெனா’ (IRIS Dena) கப்பல் மீது கடந்த 4ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 87 படையினர் உயிரிழந்ததுடன், 32 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

இந்த வெடிப்பு காரமாக கடற்கரை முழுவதும் டீசல் கறைகள் காணப்படுவதாகவும், மீன்களும் இறந்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இந்த கடற்கரைக்கு வருவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்..

எனவே அதிகாரிகள் இந்த விடயத்தை விரைவில் ஆராய்ந்து ஒரு தீர்வை வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரி்கை விடுத்துளள்னர்.

மேலும், பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இலங்கை கடற்பரப்பில் கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!