யாழ். இராணுவ படைத் தலைமையகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் வடக்கு – கிழக்கில் காணி விடுவிப்பின் போது சகல விடயங்களும் விரிவாக ஆராயப்படுவதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தல் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யானது. குறுகிய அரசியல் இலாபம் தேடும் அரசியல்வாதிகளின் செயற்பாடே இது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிக்கப்படும் போது சகல காரணிகளும் விரிவாக ஆராயப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி தான் காணிகள் விடுவிக்கப்படுகின்றன.

காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை நெருக்கடிக்குள்ளாக்கவே ஒரு தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக கட்டமைப்பு குறித்து எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் 5 ஆண்டுகால கொள்கைத் திட்டத்தை உள்ளடக்கி மூன்று தடவைக்கு செயற்படுத்தியிருந்தால் நாடு முன்னேற்றமடைந்திருக்கும், பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப்பெற்றிருக்கும்“ என தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை