ட்ரம்பிடம் நோபல் பதக்கத்தை ஒப்படைத்த வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர்!

வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரும், 2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ, நேற்று(15) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, தாம் பெற்ற நோபல் பரிசு பதக்கத்தை ட்ரம்பிடம் வழங்கியதாக, மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.

வெனிசுலா மக்களின் விடுதலைக்காக ட்ரம்ப் காட்டிய உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் இந்தச் செயலைச் செய்ததாக அவர் கூறினார்.

வெனிசுலாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ட்ரம்பின் ஆதரவைப் பெறுவதற்காக இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, மச்சாடோவை “துணிச்சலான பெண்” என்று பாராட்டிய போதிலும், தற்போதைய நிலையில் வெனிசுலாவை வழிநடத்த அவருக்குப் போதிய ஆதரவு இல்லை என்று ட்ரம்ப் கருதுவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!