இலங்கை தேசிய T-20 அணியில் இடம்பிடித்த விஜயகாந்த் வியாஸ்காந்த்!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில் இளம் சுழற் பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடரின்போது தசைப்பிடிப்பினால் பாதிக்கப்பட்ட வனிந்து ஹசரங்க இன்னும் முழுமையாகக் குணமடையாத நிலையில், அவருக்குப் பதிலாக வியாஸ்காந்த் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

தற்போது கட்டாரில் நடைபெற்று வரும் வளர்ந்துவரும் நட்சத்திரங்களுக்கான ஆசியக் கிண்ண (Asia Cup Rising Stars) தொடரில் இலங்கை ‘ஏ’ அணிக்காக விளையாடி வரும் வியாஸ்காந்த், அங்கிருந்து நேரடியாகப் பாகிஸ்தானுக்குப் பயணிக்கவுள்ளார்.

இன்று ஆரம்பமாகும் இந்த முத்தரப்புத் தொடரில், தனது முதல் போட்டியில் நாளை மறுதினம் இலங்கை அணி ஸிம்பாப்வே அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vehicles
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!
india
யாழை வந்தடைந்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்!
passports
வீதியோரத்தில் இருந்து மீட்க்கப்பட்ட கடவுச்சீட்டுகள்!
jaffna university
யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை - ரஜீவன் எம்.பி
maldives
மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்
jaffna sea
யாழ். தாளையடி கடற்பகுதிக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!