ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரமாக, அவரது சட்டத்தரணியான அகலங்க உக்வத்தே இந்த முறைப்பாட்டை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவும் இவ்வகை பதிவுகள், ஜனாதிபதியின் தனிமனிதக் கௌரவத்தையும், அரசியல் பிம்பத்தையும் சீரழிக்கும் நோக்கத்துடன் பரப்பப்படுவதாகவும், அவை முழுமையாக பொய்யானவை எனவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு பொது தலைவர்களை அவதூறுகளுக்குள்ளாக்கும் செயற்பாடுகள் நாடாளுமன்றப் பெரும்பான்மை கொண்ட ஜனநாயக அரசு மற்றும் சமூக நலனுக்கே தீங்கு விளைவிக்கக்கூடியவை என்பதால், குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!