சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்: தங்க மோதிரத்தை பரிசளித்த சுவிஸ் வாழ் தொழிலதிபர்!

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மண்ணிற்குப் பெருமை சேர்த்த சாதனை மாணவன் தெ.திருக்குமரனை கௌரவித்த சுவிஸ் வாழ் முதலீட்டாளரின் செயல் தற்போது வைரலாகி வருகிறது.

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பிரபல வர்த்தகரும், தாரணி சூப்பர் மார்க்கெட் நிறுவனருமான முதலீட்டாளர், இம்மாணவனின் அபாரமான கல்விச் சாதனையைப் பாராட்டி அவருக்கு தங்க மோதிரம் ஒன்றினைப் பரிசாக வழங்கியுள்ளார்.

தற்போது புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் அவர், தனது தாரணி சூப்பர் மார்க்கெட் ஊடாக இக்கௌரவிப்பினை நேரடியாக மாணவன் தெ.திருக்குமரனின் அனுப்பி வைத்துள்ளார்

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தனது சொந்த மண்ணின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கோடும், எதிர்காலத் தலைமுறையினருக்கு முன்மாதிரியாகச் சாதனை படைக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் தாரணி சூப்பர் மார்க்கெட் நிறுவுனர் மேற்கொண்ட இந்தச் செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!