தமிழக சட்டசபையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நாளை வாக்கெடுப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் மற்றும் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்து, விஜய் முதல்-அமைச்சராகி உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். சபாநாயகராக ஜே.டி.சி. பிரபாகர் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை சட்டசபையில் 13-ந் தேதிக்குள் (அதாவது நாளை) நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் அர்லேகர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். அதன்படி த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானம் நாளை சட்டசபையில் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

பெரும்பான்மையை நிருபிப்பதில் தமிழக வெற்றி கழகத்திற்கு அதிமுகவின் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஒரு தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்க உள்ளனர்.இதன் மூலம் தமிழக வெற்றி கழக கூட்டணியின் பலம் 151 ஆக உயர உள்ளது. இதைபோல அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் தவெகவுக்கு ஆதரவு அளிக்க ஆலோசனை நடத்தி வருகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!