மன்னாரில் தனது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை: விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

மன்னாரில் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட  குடும்பஸ்தரை எதிர் வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தனது 14 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவியான குறித்த சிறுமி யை அவரது தந்தையார் துஸ்பிரையோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் பகுதியைச் சேர்ந்த குறித்த  14 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவியான சிறுமிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர் உடனடியாக மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்திய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்திய பரிசோதனையில் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியமை தெரிய வந்துள்ளது.

வைத்தியசாலை நிர்வாகம் வைத்தியசாலை பொலிஸ் ஊடாக மன்னார் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்த நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த சிறுமியிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இதன் போது தன்னை தனது தந்தையே துஸ்பிரையோகம் செய்துள்ளதாக  குறித்த  14 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவியான சிறுமி  தெரிவித்த நிலையில் அவரை மன்னார் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

எனினும் தான் குறித்த துஷ்பிரயோகத்தை மேற்கொள்ளவில்லை என   தந்தை  தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த நபரை மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாக்கிய நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் சிறுமியின் தந்தையான   குறித்த நபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!