நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்

தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தினரால் நடாத்தப்பட இருக்கும் விளையாட்டு விழாவில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களால் காவலர் பணி, துப்புரவுப் பணி மற்றும் வாகன தரிப்பிட பணி என்பன மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இச் செயற்பாடுகளில் பங்கெடுத்துச் செயலாற்ற ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்கள் கீழுள்ள இலக்கங்களைத் தொடர்பு கொண்டு தங்களின் வரவை முன்கூட்டியே உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இந்த நிகழ்வில் பங்கேற்கும் செயற்பாட்டாளர்கள் கறுப்பு நிறக் காற்சட்டை, கறுப்பு நிற ரீ-சேர்ட் மற்றும் கறுப்பு நிறப் பாதணி ஆகிய ஆடைக் கட்டுப்பாட்டினைப் பின்பற்ற வேண்டும். உங்களுக்கான ஒளிரும் மேலங்கி மைதானத்தில் வைத்து வழங்கப்படும்.

நிகழ்வு நடைபெறும் திகதி, நேரம் மற்றும் இடம் ஆகிய விபரங்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். பதிவு செய்யும் அனைவரும் நிகழ்வு தொடங்கி முடியும் வரை மைதானத்தில் முழுமையாகச் செயற்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் செயற்பாடுகளில் ஈடுபடும் செயற்பாட்டாளர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சினால் சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு, நிகழ்வின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்படும்.

மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு ஒருங்கிணைப்பாளர்களான சஜீவனை 07481094235 என்ற இலக்கத்திலும், ஜிலானை 07440278591 என்ற இலக்கத்திலும் அல்லது Sports Minister TGTE நீதிராஜாவை 07577996966 என்ற இலக்கத்திலும் தொடர்பு கொள்ள முடியும்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MagazinePrison
மகசீன் சிறைச்சாலை N பிரிவில் ஞானசார தேரர்; நாமல் ராஜபக்சவுடன் ஒரே இடத்தில் தடுத்து வைப்பு!
protes
Thileepan Statue Protest: திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து லண்டனில் போராட்டம்
ProtestArrest
வரி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான பேரணி: புறக்கோட்டையில் 6 பேர் கைதாகினர்!
PoliceOfficerArrested
வாகன விபத்து வழக்கில் லஞ்சம்: பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்
ChennaiHighCourt
சுற்றுலா விசாவில் வந்து திருமணம்: நாடுகடத்தப்பட இருந்த இலங்கை பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு!
IranOilTanks
ஈரான் கப்பல்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை!