உயிர்த்த ஞாயிறு விசாரணை தீவிரமாக அரசியலாக்கப்படுகிறது: தற்போதைய அரசு மீது நாமல் குற்றச்சாட்டு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் தீவிரமாக அரசியலாக்கி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இந்த ஒட்டுமொத்தச் சம்பவத்தின் “கடைசி நூல்” மக்கள் விடுதலை முன்னணி (JVP) வசமே உள்ளது என்பது தற்போது தெளிவாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் சிறைச்சாலையில் இருந்தபோது, அவரை இரகசியமாகச் சந்தித்தீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு நாமல் ராஜபக்ச பின்வருமாறு பதிலளித்தார்:

“பிள்ளையானைப் பார்ப்பதற்கு நான் சிறைச்சாலையின் சுவரைத் தாண்டிக் குதிக்கவில்லை. சட்டப்பூர்வமாக, ஆவணங்களில் கையெழுத்திட்டுத்தான் பார்க்கச் சென்றேன். அந்த நேரத்தில் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் அருகில் இருந்தார்.

அது ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. நிலைமை இப்படி இருக்கையில், பொதுமக்களின் பணத்தைச் செலவழித்து பிரான்சுக்குச் சென்று, நாமல் பிள்ளையானைப் பார்க்கச் சென்றாரா என்று வாக்குமூலம் எழுதுவது பொதுப் பணத்தை துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும்.”

நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் பிள்ளையான் அரசியல் கைதியாக வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர பிள்ளையான் செய்த அர்ப்பணிப்புக்காக முன்நின்று பேசுவதற்குத் தாம் இருமுறை யோசிக்கப் போவதில்லை என்றும் மேலும் கூறினார்.

தற்போதைய அரசாங்கத்தின் விசாரணை முறைகள் குறித்து நாமல் ராஜபக்ச கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

ஞாயிறு தாக்குதலின் கோப்புகளை (Files) மூடிமறைத்த அதிகாரிக்கு பதவியுயர்வு வழங்கி, அதே அதிகாரியை அனுப்பி வாக்குமூலம் எழுதி வாங்குவதாக அவர் சாடினார்.

இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர்களின் பெற்றோர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் தீவிர உறுப்பினர்கள் என்றும், தாக்குதல் நடத்தியவரின் தந்தை JVP இன் தேசியப் பட்டியலில் இருந்த ஒரு நபர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தங்களிடம் இருப்பதாகக் கூறிய சாட்சிகளை அவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை?” என அவர் கேள்வி எழுப்பினார்.

மிரட்டி, வலுக்கட்டாயமாக வாக்குமூலங்களை எழுதி வாங்கி, மனித உயிர்கள் இழந்திருக்கும் நிலையிலும், அதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற முயற்சிக்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச, இதிலிருந்தே இந்நாட்டின் சட்டம் யாருடைய தேவைக்காகவும், யாருடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவும் செயல்படுகிறது என்பது தெளிவாகப் புரிகிறது எனத் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!